Arts, culture, entertainment and media
அஜித்குமாரின் கிளாடியேட்டர்ஸ் டிரைலர் தேதி அறிவிப்பு!
அஜித்குமாரின் கிளாடியேட்டர்ஸ் படத்தின் டிரைலர் தேதி அறிவிப்பு குறித்து...
கிளாடியேட்டர்ஸ் டிரைலர் - X | Suresh Chandra
நடிகரும் ரேஸருமான அஜித்குமாரின் கிளாடியேட்டர்ஸ் படத்தின் டிரைலர் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
இயக்குநர் ஏ.எல். விஜய் இயக்கத்தில் அஜித்தின் ரேஸிங் வாழ்க்கையைப் மையப்படுத்தி, எடுக்கப்பட்டுள்ள ஆவணப்படமான ‘கிளாடியேட்டர்ஸ்’ டிரைலர், செப். 6 ஆம் தேதியில் மாலை 6.40 மணிக்கு வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், தமிழ்நாட்டின் குறிப்பிட்ட திரையரங்குகளில் மட்டும் ரசிகர்களுக்காக படத்தின் டிரைலர் திரையிடப்பட உள்ளதாகவும் அறிவித்துள்ளனர்.
அஜித்தின் மோட்டார் ஸ்போர்ட்ஸ் பயணம், அவர் சந்தித்த சவால்கள் மற்றும் கார் பந்தய மைதானத்தில் அவர் காட்டும் ஈடுபாடு ஆகியவற்றை இந்தப் படம் காட்சிப்படுத்துகிறது.
ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ள இப்படத்தை அஜித்குமாரின் மனைவி ஷாலினியே தயாரிக்கிறார்.
Ajith Kumar's Gladiators Special Trailer Premiere on September 6
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.