Arts, culture, entertainment and media
தியேட்டர்களில் வெளியாகும் அஜித்தின் கிளாடியேட்டர்ஸ் ட்ரெய்லர்… ரசிகர்கள் உற்சாகம்
கடந்த சில மாதங்களாக அஜித் உலகின் முன்னணி கார் பந்தையங்களில் தனது அணியினருடன் பங்கேற்று வருகிறார்

அஜித்தின் கார் ரேஸ் டாக்குமென்ட்ரி படமான கிளாடியேட்டர்ஸ் ட்ரெய்லர் இன்று குறிப்பிட்ட சில தியேட்டர்களில் வெளியாகவுள்ளது.
திரையுலகில் கடந்த 30 ஆண்டுகளாக நடித்து வரும் அஜித் குமார் தனக்கென லட்சக்கணக்கான ரசிகர்களை பெற்றுள்ளார். அவரது நடிப்பில் கடைசியாக வெளிவந்த குட் பேட் அக்லி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
அதைத் தொடர்ந்து டேர் டெவில் என்ற படத்தில் அஜித் நடிக்கவுள்ளார். அனிருத் இசையமைக்கும் இந்த படத்தை குட் பேட் அக்லியின் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கவுள்ளார். இந்த படத்தை அஜித்தின் மனைவி ஷாலினி தயாரிக்கும் நிலையில் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகம் காணப்பட்டது.
இதற்கிடையே கடந்த சில மாதங்களாக அஜித் உலகின் முன்னணி கார் பந்தையங்களில் தனது அணியினருடன் பங்கேற்று வருகிறார். அதனை ஆவணப்படுத்தும் வகையில் இயக்குனர் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் கிளாடியேட்டர்ஸ் என்கிற ஆவணப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.
கிளாடியேட்டர்ஸ் படத்திற்கு ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். அஜித் ரசிகர்களை கவரும் வகையில் ஏராளமான சுவாரசிய காட்சிகள் இடம்பெற்றுள்ள இந்த படத்தின் ட்ரெய்லர் இன்று மாலை 6.40 மணியளவில் குறிப்பிட்ட சில திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Chicken Storage Tips | ஃப்ரிட்ஜில் சமைக்காத சிக்கனை எத்தனை நாட்கள் சேமித்து வைக்கலாம்?
ஃப்ரிட்ஜில் சிக்கனை எத்தனை நாட்கள் வைப்பது பாதுகாப்பானது?
அதனைச் சரியாகப் பதப்படுத்தும் முறைகள் என்னென்ன?
வீக்-எண்ட் சிக்கன் வாங்கும் முன்னாடி இத கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க!
