Politics
தமிழக பா.ஜ.,வை முடித்து வைக்கும் தலைவராவார் நயினார் நாகேந்திரன்

ஊழலற்ற அரசு வேண்டும் என்பதற்காகவே, விஜய் தலைமையிலான த.வெ.க.,விற்கு மக்கள் ஓட்டளித்தனர்.
பிரதமர் வேட்பாளர் குறித்து தனிநபர் விருப்பமும் கட்சியின் நிலைப்பாடும் வேறு. பிரதமராக ராகுல், தமிழக முதல்வராக விஜய்; இதுதான் காங்கிரஸ் நிலைப்பாடு.
சட்டசபையில் காங்., அமைச்சர் விஸ்வநாதன் பேசினாலே, தி.மு.க.,வினர் பேச விடாமல் கூச்சலிடுகின்றனர்; இது நியாயமற்றது. தி.மு.க.,வினரை சபாநாயகர் எச்சரிக்க வேண்டும். தமிழக சட்டசபைக்கு, வருங்காலத்தில் பெண் சபாநாயகர் நியமிக்கப்பட வேண்டும்.
பா.ஜ.வின் தமிழக தலைவராக உள்ள நயினார் நாகேந்திரன், தமிழகத்தில் பா.ஜ.,வை முடித்து வைக்கும் தலைவராக மாறிவிட்டார்.



