Arts, culture, entertainment and media
அஜித்குமாரின் கிளாடியேட்டர்ஸ் டிரைலர் திரையரங்குகளில் வெளியானது!
அஜித்குமாரின் கிளாடியேட்டர்ஸ் படத்தின் டிரைலர் திரையரங்குகளில் வெளியானது...
நடிகரும் ரேஸருமான அஜித்குமாரின் கிளாடியேட்டர்ஸ் படத்தின் டிரைலர் திரையரங்குகளில் வெளியானது.
இயக்குநர் ஏ.எல். விஜய் இயக்கத்தில் அஜித்தின் ரேஸிங் வாழ்க்கையைப் மையப்படுத்தி, எடுக்கப்பட்டுள்ள ஆவணப்படமான ‘கிளாடியேட்டர்ஸ்’ டிரைலர், தமிழகம் முழுவதும் பல்வேறு திரையரங்குகளில் வெளியானது.
கிளாடியேட்டர்ஸ் டிரைலரை காண இயக்குநர்கள் ஏ.எல். விஜய், ஆதிக் ரவிச்சந்திரன், சிறுத்தை சிவா ஆகியோரும் திரையரங்குக்கு வருகை தந்தனர்.
அஜித்தின் மோட்டார் ஸ்போர்ட்ஸ் பயணம், அவர் சந்தித்த சவால்கள் மற்றும் கார் பந்தய மைதானத்தில் அவர் காட்டும் ஈடுபாடு ஆகியவற்றை இந்தப் படம் காட்சிப்படுத்துகிறது.
ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ள இப்படத்தை அஜித்குமாரின் மனைவி ஷாலினியே தயாரிக்கிறார்.
Ajith Kumar's 'Gladiators' trailer has been released
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.