Politics
டிரெண்ட் மாறியிருக்கு; நாம புரிஞ்சுக்கணும்
தாராபுரம்:தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் தி.மு.க., வேட்பாளர் சுகன்யாவை ஆதரித்து நடக்கும் தேர்தல் பணிகளை, முன்னாள் அமைச்சர் மகே ஆய்வு செய்தார்.
பின் தி.மு.க., துணைப் பொது செயலாளர் சாமிநாதன், மாவட்ட செயலாளர் பத்மநாபன் முன்னிலையில் நடந்த நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது: என்னதான், நீங்க களத்தில் இறங்கி வேலை செய்தாலும், சமூக வலைதளத்தில் நாம் என்ன செய்கிறோம் என்பதை பார்க்கிறார்கள். நம்மைப் பொறுத்தவரை, நமது உழைப்பு இரண்டு விதத்தில் இருக்க வேண்டும். களத்திலும் சரி, சமூக வலைதளத்திலும் சரி. இங்குள்ள பலர் நாம பார்க்காத தேர்தலா என மனசுல நினைக்கலாம். நாங்க கூட அப்படித்தான், 2026 தேர்தல் முடிவு வரும் வரை நினைத்தோம். ஆனா 'டிரெண்ட் மாறிடுச்சு. டிரெண்ட் மாறும்போது அதை ஏற்றுக்கொள்ள வேண்டும். நம் வீட்டு குழந்தைகளிடம் கூட நாம் ஒரு போராட்டத்திற்கு செல்கிறோம் என்றால் அதைப் பற்றி பேச வேண்டும்.இது நமக்கான பரீட்சை மட்டுமல்ல; நமது இயக்கத்திற்கான பரீட்சையும் கூட. இவ்வாறு அவர் பேசினார்.