Politics
மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலில் யாருக்கு ஆதரவு..? பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பதில்!

இடைத்தேர்தலில் பாமக யாருக்கு ஆதரவு தரும் என்ற நிலைப்பாடு குறித்து அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் பேட்டியளித்துள்ளார்.
தமிழ்நாட்டில் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரண்டு தொகுதிகளுக்கு வரும் அக்டோபர் 6ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது. இரண்டு தொகுதிகளிலும் தற்போது தவெக, திமுக, அதிமுக, நாதக மற்றும் இடதுசாரிகள் என ஐந்து முனை போட்டி ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், சென்னை கிண்டியில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார். அப்போது அவர் பேசுகையில், “தமிழகத்தில் எந்த ஒரு திட்டம் வந்தாலும் மக்கள் வரவேற்க கூடிய திட்டமாக மக்கள் எதிர்கிற திட்டமாகவும் இருக்க கூடாது. மக்கள் ஆதரிக்கிற ஒரு இடத்தை தேர்வு செய்யுங்கள். இப்போது மீனவர்கள் போராட்டத்தை ஆரம்பித்து விட்டார்கள். சென்னையின் வெளிபுறத்தில் இருந்தாலும் பரவாயில்லை அங்கு தலைமைசெயலகம் அமைக்கப்படலாம் அல்லது கலைஞர் கட்டிய ஓமந்தூரார் உள்ளது அதில் கொண்டு வரலாம். மக்களுக்கு பாதிப்பு இல்லாத எந்த இடத்தில் வந்தாலும் அதை வரவேற்போம். திருமாவளவன் மீது மிகப்பெரிய மரியாதை உள்ளது.
இடைத்தேர்தலில் யாருக்கு ஆதரவு?
நிலைப்பாட்டை விரைவில் அறிவிப்போம் -பாமக தலைவர் அன்புமணி #AnbumaniRamadoss #ByElection #PMK #ADMK #NDA #News18TamilNadu
WATCH NOW https://t.co/TCsOveCuy4 pic.twitter.com/1e2WxHXJds
— News18 Tamil Nadu (@News18TamilNadu) September 16, 2026
2016 ல் மக்கள் நல கூட்டணி அமைக்கப்பட்டது. அப்போது திருமாவளவன் கட்சி அலுவலகத்தில் வந்து கேப்டனிடம் நீங்கள் தான் முதலமைச்சர் வேட்பாளராக. இருக்க வேண்டும் என்று தெரிவித்தார். வரலாறு மாறாது. யாரையும் காயப்படுத்த கூடாது. திமுக கூட்டணியில் இருந்தபோது எனக்காக என்னுடைய தொகுதியில் வந்து திருமாவளவன், கனிமொழி ஆகியோர் பிரச்சாராம் மேற்கொண்டார்கள். அதை எப்போதும் மறக்க மாட்டேன். சேலத்தில் கூட நடந்த கூட்டத்தில் நான் எழுந்து நிற்கவில்லை என்று சொன்னார்கள்.
அப்போது விமர்சனம் வந்தது. ஆனால் திருமாவளவன் அதை சரியாக கையாண்டார். சட்டப்பேரவையில் பழையை வரலாறை பேசுவது தேவையற்றது. எதிர்காலத்திற்கு என்ன திட்டம் இருக்கிறது என்பதையே தவெகவினர் பேச வேண்டும். இளைஞரகள் வேலையின்றி இருக்கின்றனர். வேலைவாய்ப்பை உருவாக்குங்கள். சென்னையில் பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை பாதுகாப்பது அவசியம். சதுப்பு நிலத்தில் எந்த கட்டுமானமும் இருக்க கூடாது. சுற்றுச்சுவர் கூட கட்டக் கூடாது.
இடைத்தேர்தலில் பாமக போட்டியிடாது. இடைத்தேர்தலில் பாமக யாருக்கு ஆதரவு என்ற நிலைப்பாட்டை விரைவில் அறிவிப்போம். எங்களின் நிலைப்பாட்டை அறிவித்த பின் அனைத்து கேள்விகளுக்கும் பதில் அளிக்கிறேன். தமிழக முதலமைச்சர் விஜய் லண்டன் சென்றுள்ளார். ஒரு நிறுவனத்திடம் ஒப்பந்தம் போட்டுள்ளார். அந்த நிறுவனம் 30 ஆண்டுகாலமாக சென்னையில் இயங்கி வருகிறது. இங்கையே ஒப்பந்தம் கையெழுத்து போட்டிருக்கலாம்.” என்று பேசினார்.
