Politics
தாம்பரம் மாநகராட்சியில் கமிஷனர் பொறுப்பேற்பு
தாம்பரம்: ‘டெண்டர்’ முறைகேடு குற்றச்சாட்டில், தாம்பரம் மாநகராட்சி கமிஷனர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டதை அடுத்து, தாம்பரம் மாநகராட்சியில் கூடுதல் பொறுப்பாக, ஆவடி கமிஷனர் நேற்று முன்தினம் பொறுப்பேற்று கொண்டார்.
தாம்பரம் மாநகராட்சியில், ‘டெண்டர்’ முறைகேடு நடந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், கமிஷனராக இருந்த பாலச்சந்தர் விடுவிக்கப்பட்டு, காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டார். அவருக்கு பதிலாக, ஆவடி மாநகராட்சி கமிஷனர் சரண்யா, மறு உத்தரவு வரும் வரை, தாம்பரம் மாநகராட்சி கமிஷனர் பொறுப்பை கூடுதலாக கவனிப்பார் என, அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, ஆவடி மாநகராட்சி கமிஷனர் சரண்யா, தாம்பரம் மாநகராட்சி கமிஷனர் கூடுதல் பொறுப்பாக நேற்று முன்தினம் பதவியேற்று கொண்டார்.