Politics
கழுகார் பதில்கள்!

வீட்டிலிருந்து அவரே மதிய உணவு கொண்டு வந்து, டிபன் பாக்ஸை அவரே திறந்து, அவரே சாப்பிடும் நேரத்தில் முதல்வர் விஜய் அறைக்கு.
பொய்யான தகவல்களுடன்கூடிய ரீல்ஸ், இந்தியாவில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தியது மாதிரி வேறு எந்த நாட்டிலாவது நடந்தது உண்டா?
கேள்வி மாதிரி தெரியலையே... ஆதங்கம் மாதிரில்ல தெரியுது!
நான் எம்.எல்.ஏ ஆவதற்கு எந்தக் கட்சியில் சேர வேண்டும்?
உங்களுக்கு கார் வேண்டுமா, வேண்டாமா... என்பதைப் பொறுத்துத்தான் எந்தக் கட்சி என்று சொல்ல முடியும்.
அரசியல் சதுரங்கமா... பரமபதமா..?
முதல்வருக்கும் எதிர்க்கட்சித் தலைவருக்கும் நடக்கும் ஓட்டப்பந்தயம்.
தமிழ்நாடு அரசின் கஜானா காலியாக இருப்பதாக அமைச்சர் ஆனந்த் பேசியிருக்கிறாரே?
புதிய தலைமைச் செயலகம், எம்.எல்.ஏ-க்களுக்கு கார்கள், முதல்வர் அலுவலக மாற்றம் என வாரம் ஓர் அதிரடி அறிவிப்புக்கு எடுத்துச் செலவழித்துவிட்டதால் காலியாகிவிட்டது என்கிறாரோ?
பெயர்களைத் தப்புத் தப்பாய் உதிர்க்கும் முன்னாள் அ.தி.மு.க அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், இப்போது என்ன நினைத்துக் கொண்டிருப்பார்?
`நடிகர் அஜித்குமார் ஆட்சியில், இன்பநிதி எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும் நேரத்தில் பாராளுமன்றத்தில் நாம் இல்லாமல் போய்விட்டோமே’ என்று நினைத்து வருந்திக்கொண்டிருப்பார்.
உதயநிதி - உதிக்கும் சூரியனா... மறையும் சூரியனா..?
(சட்டமன்றத்துக்கு) பாதி நாள் பிரசன்ட் ஆகி, பாதி நாள் ஆப்சென்ட் ஆகும் சந்திரன்.
``பாம்புக்கடியிலிருந்து தப்பிக்க நாகதோஷ பூஜை செய்ய வேண்டும்’’ என்று ஓ.பன்னீர்செல்வம் கூறியிருப்பது பற்றி..?
எம்.எல்.ஏ-க்களைவிட ஜோசியர்களுக்குத்தான் தற்போது பெரிய பதவிகள் கிடைக்கின்றன என்பதால் இப்படி இறங்கிவிட்டாரோ?
செல்போன் கொண்டு செல்ல வேறு எங்கெங்கெல்லாம் தடை விதிக்கலாம் கழுகாரே?
ஜி.கே.வாசனின் த.மா.கா-வுடன் கட்சியை இணைத்த தமிழருவி மணியன், இப்போது என்ன செய்கிறார்?
ஜி.கே.வாசனே ஒன்றும் செய்யாதபோது, கட்சியை இணைத்த தமிழருவி மணியன் மட்டும் ஏதாவது செய்துவிடுவாரா என்ன?!
உச்சத்தில் இருக்கும்போதே உச்சத்தைப் பிடித்துவிட வேண்டும். இல்லாவிட்டால்..?
இல்லாவிட்டால், `தேதி பின்னர் அறிவிக்கப்படும்’ என்று சொல்லி, காலத்தை ஓட்டவேண்டியிருக்கும்!
எடப்பாடியாருக்கு எப்படிப் புகழ்வது பிடிக்கும்?
அக்ரி கிருஷ்ணமூர்த்தியிடம் கேளுங்கள்... இந்தக் கேள்விக்கு மின்னலென பதிலைக் கொப்பளிப்பார்!
சமீபத்தில் அ.தி.மு.க-விலிருந்து, த.வெ.க-வுக்குப் போன ‘சிங்கை’ ராமச்சந்திரனுக்கு, தமிழ்நாடு ஸ்டார்ட்அப் மற்றும் புத்தாக்க இயக்கத் தலைவராகும் ‘அதிர்ஷ்டம்’ அடித்திருக்கிறதே..?
`அதிர்ஷ்டம்’ அடிக்கும் என்ற உறுதி கிடைத்த பிறகுதானே அவர் கட்சியே தாவியிருப்பார்!
``2031-ல் பா.ம.க ஆட்சி அமையும்’’ என அன்புமணி எதன் அடிப்படையில் கூறுகிறார்?
2016-ல், `பா.ம.க ஆட்சி அமையும்’ என எதன் அடிப்படையில் கூறினாரோ, அதன் அடிப்படையில்தான்!
எல்லா நடிகர்களும் அரசியலில் குதித்துவிட்டால், சினிமாவின் நிலை என்னவாகும்?
சினிமா ரசிகர்களே இப்போது அரசியல் அப்டேட், சட்டமன்ற நிகழ்வுகள் என திசை திரும்பிவிட்டதால், `போகப் போக, பொழுதுபோக்குக்கு சினிமாவின் தேவை குறைந்துவிடுமோ...’ என்றே தோன்றுகிறது!
“2029-ல் எடப்பாடியார் கைகாட்டுபவரே பிரதமர்’’ என்ற ஆர்.பி.உதயகுமாரின் கருத்தைக் கேட்டதும், கழுகாருக்கு நினைவுக்கு வந்தது என்னவோ?!
``2026-ல் நான்தான் முதல்வர்’’ எனத் தன்னைத் தானே எடப்பாடியார் கைகாட்டிக்கொண்டதுதான் நினைவுக்கு வந்தது!
கழுகாருக்கு விஜய்யிடமிருந்து கூலிங் கிளாஸ் கிடைக்க வேண்டுமா? (பரிசு ரூ.250)
எதுக்கு பாஸ்... ‘கூலிங் கிளாஸ் வாங்கிய மூதாட்டியே அத்தனை பிரஸ் மீட் கொடுத்துவிட்டார்; நீங்க எப்ப பிரஸ் மீட் கொடுப்பீங்க?’ என்று முதல்வர் விஜய்யிடம் கேட்பதுபோல் என்னிடமும் கேட்டுவிடப் போகிறார்கள்.
கழுகார் பதில்கள், ஜூனியர் விகடன், 757, அண்ணா சாலை, சென்னை-600 002.
kalugu@vikatan.com என்ற இமெயிலுக்கும் அனுப்பலாம்!
