Politics
மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: வேட்புமனு தாக்கலுக்கு இன்று கடைசி நாள்!

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கலுக்கு இன்று கடைசி நாள்...
தாராபுரம் திமுக வேட்பாளர் வேட்புமனு தாக்கல்... - DIN
மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்ய இன்று (செப். 16) கடைசி நாளாகும்.
தமிழகத்தில் முதல்வர் விஜய் போட்டியிட்ட திருச்சி கிழக்கு உள்ளிட்ட 7 தொகுதிகள் காலியாக உள்ள நிலையில் அதில் மதுராந்தகம், தாராபுரம் ஆகிய தொகுதிகளுக்கு மட்டும் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.
மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலில் தவெக கூட்டணி, திமுக, அதிமுக, நாதக, இடதுசாரிகள் என பலமுனைப் போட்டி நிலவுகிறது. சுயேச்சைகளும் வேட்புமனு தாக்கல் செய்து வருகின்றனர்.
தவெக, திமுக வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்த நிலையில் அதிமுக, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகளின் வேட்பாளர்கள் இன்று வேட்புமனு தாக்கல் செய்கின்றனர்.
இந்நிலையில் மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனு தாக்கல் இன்றுடன் (செப். 16) நிறைவடைகிறது.
நாளை (செப். 17) வேட்புமனு மீதான பரிசீலனையும் செப். 19 ஆம் தேதி வேட்புமனுவை திரும்பப் பெற கடைசி நாள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அக். 6 ஆம் தேதி வாக்குப்பதிவும் அக். 9 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெறுகிறது.
தமிழகத்தில் மற்ற தொகுதிகளின் இடைதேர்தல் தொடர்பான வழக்குகள் நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால் மீதியுள்ள 5 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்படவில்லை.
Madhuranthakam, Dharapuram by-elections: Today is the last day to file nomination papers
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.