Arts, culture, entertainment and media
அஜித்தின் “கிளாடியேட்டர்ஸ்” டிரெய்லர் திரையரங்குகளில் வெளியானது

அஜித்குமாரின் “கிளாடியேட்டர்ஸ்” ஆவணப்படத்தின் டிரெய்லர் திரையரங்குகளில் வெளியானது
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான அஜித்குமார், 1993-ஆம் ஆண்டு வெளியான ‘அமராவதி’ திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். தொடர்ந்து 60-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து தனக்கென மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியுள்ளார். சினிமாவுடன் கார் பந்தயத்திலும் தீவிர ஆர்வம் கொண்டுள்ள அஜித், ‘குட் பேட் அக்லி’ படத்திற்குப் பிறகு மீண்டும் சர்வதேச ரேசிங் போட்டிகளில் முழு கவனம் செலுத்தி வருகிறார். தனது சொந்த அணியான ‘அஜித்குமார் ரேசிங்’ மூலம் பல்வேறு சர்வதேச தொடர்களில் பங்கேற்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்து வருகிறார்.
‘குட் பேட் அக்லி’ படத்தைத் தொடர்ந்து இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரனுடன் அஜித் மீண்டும் இணைந்துள்ளார். அஜித்தின் 64-வது திரைப்படமாக உருவாகி வரும் இந்தப் படத்திற்கு ‘டேர்டெவில்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தை அஜித்தின் மனைவி ஷாலினி தயாரிக்கிறார். இந்த அறிவிப்பு ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.
இதற்கிடையில், அஜித்தின் சர்வதேச மோட்டார் ஸ்போர்ட்ஸ் பயணத்தை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள 'கிளாடியேட்டர்ஸ் - இன் பர்சூட் ஆஃப் சேலஞ்சஸ்' ஆவணப்படத்தை இயக்குநர் ஏ.எல். விஜய் இயக்கியுள்ளார். இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார்.
இந்த நிலையில், அஜித்குமாரின் ‘கிளாடியேட்டர்ஸ்’ ஆவண படத்தின் டிரெய்லர் செப்டம்பர் 6ஆம் தேதி மாலை 6:40 மணிக்கு வெளியாகும் என படக்குழு ஏற்கனவே அறிவித்திருந்தது. மேலும் தமிழ்நாட்டில் எந்தெந்த தியேட்டரில் டிரெய்லர் திரையிடப்பட உள்ளது என்பது குறித்தும் படக்குழுவினர் பட்டியல் வெளியிட்டனர்.
‘கிளாடியேட்டர்ஸ்’ டிரெய்லரை காண இயக்குநர்கள் ஏ.எல். விஜய், ஆதிக் ரவிச்சந்திரன், சிறுத்தை சிவா ஆகியோரும் திரையரங்குக்கு வருகை தந்தனர். அஜித்தின் மோட்டார் ஸ்போர்ட்ஸ் பயணம், அவர் சந்தித்த சவால்கள் மற்றும் கார் பந்தய மைதானத்தில் அவர் காட்டும் ஈடுபாடு ஆகியவற்றை இந்தப் படம் காட்சிப்படுத்துகிறது.இப்படத்தை அஜித்குமாரின் மனைவி ஷாலினியே தயாரித்துள்ளார்.