Politics
மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலில் மொத்தம் 99 பேர் வேட்புமனு தாக்கல்.. இன்று பரீசலனை

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலில் 99 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர். இன்று மனுக்கள் பரிசீலிக்கப்படுகின்றன.
மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளில் 99 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. மதுராந்தகம், தாராபுரம் ஆகிய தொகுதிகளின் இடைத்தேர்தலுக்கான வேட்புமனுக்கள் இன்று பரிசீலிக்கப்படுகிறது.
மதுராந்தகம், தாராபுரம் ஆகிய தொகுதிகளின் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, தவெகவில் இணைந்தனர். இதையடுத்து, காலியானதாக அறிவிக்கப்பட்ட இரு தொகுதிகளுக்கும் அடுத்த மாதம் 6ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 9ஆம் தேதி தொடங்கிய நிலையில், நேற்று பிற்பகல் 3 மணியோடு நிறைவடைந்தது.
கடைசி நாளில் தாராபுரம் தொகுதியில் தவெக வேட்பாளர் சத்யபாமா, இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர் லட்சுமணன், மதுராந்தகம் தொகுதியில் அதிமுக வேட்பாளர் கணிதா சம்பத், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் சுகந்தி ஆகியோர் வேட்புமனு தாக்கல் செய்தனர்.
சட்டமன்றத் தேர்தலில் நான்கு முனைபோட்டியாக இருந்த களம், இடதுசாரிகள் தனித்து களம் காண்பதால் ஐந்து முனை போட்டியாக மாறியுள்ளது. அதன்படி, தவெக, திமுக, அதிமுக, இடதுசாரிகள், நாம் தமிழர் ஆகிய கட்சிகள் களத்தில் உள்ளன.
மதுராந்தகத்தில் 48 பேரும், தாராபுரத்தில் 51 பேரும், புதுச்சேரி தட்டாஞ்சாவடியில் 15 பேரும் வேட்பு மனுத்தாக்கல் செய்துள்ள நிலையில், வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை இன்று நடைபெறுகிறது. வேட்புமனுவை திரும்ப பெற வரும் 19ஆம் தேதி கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
