Politics
தாராபுரம் தொகுதி இடைத்தேர்தல் தி.மு.க., வேட்பாளர் மனுதாக்கல்
தாராபுரம்:தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலில், தி.மு.க., கூட்டணி சார்பில் வழக்கறிஞர் சுகன்யா, 33, போட்டியிடுகிறார். இவர் நேற்று காலை மனுதாக்கல் செய்தார்.
தி.மு.க., துணை பொது செயலாளர் சாமிநாதன், மாவட்ட செயலாளர் பத்மநாபன், ஈரோடு எம்.பி., பிரகாஷ் மற்றும் முன்னாள் அமைச்சர் கயல்விழி ஆகியோர் உடனிருந்தனர். அவரது வேட்புமனுவை தாராபுரம் வருவாய் கோட்டாட்சியர் பெலிக்ஸ் ராஜா பெற்றுக் கொண்டார்.