Arts, culture, entertainment and media
Sigma: "நான் முதலில் தியேட்டரில் பார்த்த படம்..." - ஜேசன் சஞ்சய் சொன்னதும் அதிர்ந்த அரங்கம்
விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கியிருக்கும் 'சிக்மா' திரைப்படம் அக்டோபர் 2 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இந்தப் படத்தில் சந்தீப் கிஷன் ஹீரோவாக நடித்திருக்கிறார்| jason sanjay shares first movie he watched in a theatre

"'City Of God' என்ற பிரேசிலியன் படம் தான்... அந்தப் படத்தை சிறுவயதில் நான் பார்த்தேன். அந்தப் படம்தான் நான் இயக்குநராக என்ற ஆர்வத்தைக் கொடுத்தது" - ஜேசன் சஞ்சய்.
முதல்வர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கியிருக்கும் 'சிக்மா' திரைப்படம் அக்டோபர் 2 ஆம் தேதி வெளியாக இருக்கிறது.
இந்தப் படத்தில் சந்தீப் கிஷன் ஹீரோவாக நடித்திருக்கிறார். ஜேசன் இயக்குநராக அறிமுகமாகியிருக்கும் திரைப்படம் என்பதால் இதன் மீது அதீத எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது.
இந்நிலையில் இந்தப் படத்தின் ப்ரீ ரிலீஸ் ஈவென்ட் நேற்று (செப்.8) சேலத்தில் நடைபெற்றது.
இதில் கலந்துகொண்ட ஜேசன் சஞ்சய்யிடம் நீங்கள் திரையரங்கிற்குச் சென்று பார்த்த முதல் படம் எது என்று கேட்கப்பட்டிருக்கிறது.
அதற்கு பதில் அளித்த ஜேசன் சஞ்சய், "'திருமலை' படத்தைத்தான் பார்த்தேன். அப்போது எனக்கு 3 வயது இருக்கும்" என்று பதிலளித்திருக்கிறார். விஜய் படம் என்பதால் அவர் அளித்த பதிலைக் கேட்டு மாணவர்கள் அரங்கம் அதிர கத்தியிருக்கின்றனர்.
தொடர்ந்து உங்களுக்கு இயக்குநர் ஆக வேண்டும் எண்ணத்தைத் தூண்டிய படம் எது என்ற கேள்விக்கு, "யாரும் என்னைத் திட்டாதீர்கள். 'City Of God' என்ற பிரேசிலியன் படம் தான்... அந்தப் படத்தை சிறுவயதில் நான் பார்த்தேன். அந்தப் படம்தான் நான் இயக்குநராக என்ற ஆர்வத்தைக் கொடுத்தது" என்றிருக்கிறார்.
நீங்கள் இயக்கிய முதல் குறும்படம் எது என்ற கேள்விக்கு, "'Pull the Trigger'. 2022-ல் அந்தப் படத்தை நான் எடுத்தேன்" என்று கூறியிருக்கிறார்.
