Arts, culture, entertainment and media
மதுரை- சினிமா- 11.09
சிக்மா பற்றி ஜேசன் சொன்னது என்ன முதல்வர் விஜயின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கி உள்ள முதல் படம் சிக்மா. சந்தீப்
முதல்வர் விஜயின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கி உள்ள முதல் படம் 'சிக்மா'. சந்தீப் கிஷன், பரியா அப்துல்லா நடித்துள்ளனர். இப்படம் பற்றி பேசிய ஜேசன் ''அக். 2 ல் சிக்மா வெளியாகிறது. நம் எல்லோர் வாழ்விலும் கண்டிப்பாக ஒரு சிக்மா மொமன்ட் இருக்கும். அதாவது, கடினமான தருணங்களில் இருந்து மீண்டு வர நாம் எடுக்கும் ஒரு முடிவு நம் வாழ்க்கையை மாற்றும். அதுதான் சிக்மா. படத்திற்கு ஆதரவு கொடுங்கள் என்றார்.
'ஓடிடி'க்காக மாற்றப்படும் 'டாக்சிக்'
கீது மோகன்தாஸ் இயக்கத்தில் யஷ், நயன்தாரா, கியாரா அத்வானி உள்ளிட்டோர் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் 'டாக்சிக்'. ரூ.600 கோடியில் எடுக்கப்பட்ட படம் கடும் விமர்சனங்களால் தோல்வியை தழுவியது. இதனால் 'ஓடிடி'யிலும் குறைந்த விலைக்கு படத்தை கேட்கின்றனர். இதை சரி செய்யும் வகையில் படத்தில் இடம்பெற்ற சில ஆபாசம் மற்றும் வன்முறை காட்சிகளை நீக்கி, எடிட் செய்யப்பட்ட ஒரு புதிய பதிப்பை வெளியிட படக்குழுவினர் ஆலோசித்து வருகின்றனர்.
150 ஆண்டுகளுக்கு முந்தைய கதையில் 'ரணபாலி'
ராகுல் சங்கிருதயன் இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா - ராஷ்மிகா தம்பதியர் ஜோடியாக நடித்துள்ள படம் 'ரணபாலி'. 1876-78 காலகட்டத்தில் நடந்த வரலாற்று பின்னணியில் உருவாகியுள்ள இப்படம் அக்.,16ல் ரிலீசாவதாக அறிவித்துள்ளனர். ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் தென்னிந்தியாவில் ஏற்பட்ட பஞ்சம், ஆங்கிலேயர்களின் அடக்குமுறையை எதிர்க்கும் கதையாக உருவாகியுள்ளது. தற்போது இதன் டீசர் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது.
செலவு சிறுசு.... வரவு பெருசு...
உ.பி.யை சேர்ந்த நீம் கரோலி பாபாவின் போதனைகளை அடிப்படையாக கொண்டு ஹிந்தியில் ஆகஸ்ட் மாதம் வெளியான படம் ஹனுமான் அன்ஷ். விஷால் சதுர்வேதி இயக்க, பாபா வேடத்தில் ஷோபினா சத்யா நடித்திருந்தார். மவுத் டாக் மூலமே பிரபலமான இப்படம் ரசிகர்களிடம் அமோக வரவேற்பை பெற்றுள்ளது. வெறும் ரூ.2 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு இப்போது ரூ.180 கோடி வசூலை வாரிக் குவித்துள்ளது.
இயக்குனர் ராஜ் நிடிமொருவை இரண்டாவது திருமணம் செய்த நடிகை சமந்தா தற்போது கர்ப்பமாக உள்ளார். தாய்மை பற்றி அவர் அளித்த ஒரு பேட்டியில், ''பங்காரம் (தங்கமே...) என எனது குழந்தையை அழைக்க காத்திருக்கிறேன். தாய்மை காரணமாக வாழ்க்கையில் முற்றிலும் புதிய ஒரு கட்டத்தை வரவேற்க ஆவலுடன் எதிர்பார்த்து உள்ளேன் என்கிறார்.