Economy, business and finance
யுபிஐ பரிவர்த்தனைக்கு கட்டணம்! ராகுல் காந்தி கண்டனம்!

யுபிஐ பணப்பரிவர்த்தனைக்கு கட்டணம் விதிக்கும் மத்திய அரசின் முடிவுக்கு ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளது குறித்து....
ராகுல் காந்தி / யுபிஐ பணப்பரிவர்த்தனை - கோப்புப் படம்
இது தொடர்பாக தனது எக்ஸ் தளப் பக்கத்தில் ராகுல் காந்தி பதிவிட்டுள்ளதாவது:
''யுபிஐ பணப்பரிவர்த்தனை மீது கட்டணம் விதிக்கும் கதவை பாஜக மெல்ல திறந்துவிட்டுள்ளது.
இனி, ரூ. 2,000-க்கு மேற்பட்ட வணிகர் யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் விதிக்கப்படலாம். இத்தகைய பரிவர்த்தனைகள் எண்ணிக்கையின் அடிப்படையில் 5% மட்டுமே இருந்தாலும், யுபிஐயின் மொத்தப் பரிவர்த்தனை மதிப்பில் இவை ஏறக்குறைய 65% பங்கைக் கொண்டுள்ளன.’
கடைக்காரர்கள் மீது விதிக்கப்படும் கட்டணங்கள் யார் தலையில் சென்று விழும். நேரடியாக மக்களிடம்தான். பொருள்களுக்கு கூடுதல் கட்டணம் விதிக்கப்பட்டு மக்களிடமே வசூலிக்கப்படும்.
அமெரிக்க பணப்பரிவர்த்தனை நிறுவனங்கள் இந்தியாவின் பூஜ்ஜிய கட்டணக் கொள்கையை நீண்டகாலமாக எதிர்த்து வருகின்றன. இதற்கு ஏற்ற திசையில் கொள்கைப் பாதைகளை திறந்துவிட்டுள்ளது மோடி அரசு'' எனக் குறிப்பிட்டுள்ளார்.
मà¥à¤¦à¥ सरà¤à¤¾à¤° नॠà¤à¥à¤ªà¤à¤¾à¤ª UPI पर फ़à¥à¤¸ लà¤à¤¾à¤¨à¥ à¤à¤¾ रासà¥à¤¤à¤¾ à¤à¥à¤² दिया हà¥à¥¤
à¤à¤¬ â¹2,000 सॠà¤à¤ªà¤° à¤à¥ merchant UPI लà¥à¤¨-दà¥à¤¨ पर MDR लà¤à¤¾à¤¯à¤¾ à¤à¤¾ सà¤à¤¤à¤¾ हà¥à¥¤ à¤à¤¨ à¤à¥à¤°à¤¾à¤à¤à¥à¤à¥à¤¶à¤à¤¸ à¤à¥ सà¤à¤à¥à¤¯à¤¾ à¤à¤²à¥ हॠसिरà¥à¤«à¤¼ 5% हà¥, लà¥à¤à¤¿à¤¨ UPI à¤à¥ à¤à¥à¤² transaction value à¤à¤¾ à¤à¤°à¥à¤¬ 65% à¤à¤¨à¥à¤¹à¥à¤ मà¥à¤ हà¥à¥¤
सरà¤à¤¾à¤° à¤à¤¹à¤¤à¥ हॠà¤à¤¿ à¤à¥à¤°à¤¾à¤¹à¤ सॠà¤à¥à¤ फ़à¥à¤¸ नहà¥à¤â¦
மேலும் அவர், ''பிரதமர் நரேந்திர மோடி முன்னெடுத்த யுபிஐ புரட்சியை எதிர்த்த அதே கட்சிதான் (காங்கிரஸ்) இது... பிரதமர் மோடியின் தலைமையிலான இந்தியாவில் சாதிக்கப்பட்ட டிஜிட்டல் நிதிப் புரட்சியைத் தொடர்ச்சியாக எதிர்த்து வந்துள்ள காங்கிரஸ் கட்சி, இன்று அதற்கு எதிராக பொய்களைப் பரப்பி வருகிறது'' எனக் குறிப்பிட்டுள்ளார்.
Rahul Gandhi criticises Centre over 'imposition' of UPI fees
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.