Economy, business and finance
UPI பரிவர்த்தனைக்கு கட்டணம் - யார் யாருக்கு?

2,000 ரூபாய்க்கு மேற்பட்ட வணிகம் சார்ந்த யுபிஐ பரிவர்த்தனைக்கு அக்டோபர் 15ஆம் தேதி முதல் 0.4 விழுக்காடு வரை கட்டணம் அமலுக்கு வருகிறது.
இக்கட்டணம் வர்த்தகர்களுக்கு மட்டுமே பொருந்தும் என்றும் சாதாரண நுகர்வோருக்கு யுபிஐ சேவைகள் எப்போதும் போல இலவசமாகவே தொடரும் என்றும் NPCI அறிவித்துள்ளது.
கடைகளில் பொருட்கள் வாங்குவது, கியூஆர் கோடு ஸ்கேன் செய்து பணப் பரிமாற்றம் செய்வது என பொதுமக்களுக்கான எந்தவொரு பரிவர்த்தனைக்கும் கட்டணம் வசூலிக்கப்படாது.
அதேபோன்று, நண்பர்கள் / உறவினர்களுக்குப் பணம் அனுப்புதல் உள்ளிட்ட தனிநபர்களுக்கு இடையிலான பணப் பரிமாற்றங்கள், சுய கணக்குப் பரிமாற்றங்கள் ஆகியவை எவ்வித வரம்புமின்றி இலவசமாகவே தொடரும்.
மேலும் கூகுள் பே, போன் பே போன்ற யுபிஐ செயலிகள் பயனர்களிடம் ‘பிளாட்பார்ம் கட்டணம்’ என எதையும் வசூலிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மாதம் 1 லட்சம் ரூபாய் வரை யுபிஐ மூலம் கட்டணம் பெறும் சிறு வணிகர்கள் மற்றும் சாலையோர வியாபாரிகள் இந்த எம்டிஆர் (( MDR ))கட்டணத்தில் இருந்து முழுமையாக விலக்குப் பெறுகின்றனர்.