Politics
நடுநிலைப்பள்ளியில் காலை உணவு :53 ஆயிரமாக உயரும் பயனாளிகள்
திருப்பூர்: ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை துவக்க பள்ளிகளுக்கு மட்டும் நடைமுறையில் இருந்த காலை உணவு திட்டத்தை, ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரை நடுநிலைப் பள்ளிகளுக்கும் விரிவுபடுத்த அரசு திட்டமிட்டுள்ளது.
காலை உணவு திட்டத்தின் வாயிலாக திருப்பூர் மாவட்டத்தில் இதுவரை, 35 ஆயிரத்து, 226 பேர் பயன்பெற்ற நிலையில், இனி, 18 ஆயிரத்து, 457 பேர் கூடுதலாக பயன்பெற உள்ளனர். இதனால், மாவட்டத்தில் காலை உணவு திட்டத்தின் கீழ் பயன்பெறுவோர் எண்ணிக்கை, 53 ஆயிரத்து, 683 ஆக அதிகரிக்கும்.
தமிழக அரசின் காலை உணவு திட்டத்தின் கீழ் ஒன்று முதல், ஐந்தாம் வகுப்பு வரை உள்ள குழந்தைகளுக்கு வாரத்தின் ஐந்து நாட்கள் உப்புமா, சிச்சடி, பொங்கல், சாம்பார் சாதம் என தினம் ஒரு வகையில், காலை உணவாக வழங்கப்படுகிறது. பெற்றோர் மற்றும் மாணவ, மாணவியரிடம் வரவேற்பை பெற்றுள்ள இத்திட்டத்தை ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரையுள்ள நடுநிலைப்பள்ளி மாணவ, மாணவியருக்கும் விரிவுபடுத்த போதாக அரசு அறிவித்தது.
இததற்காக, மாவட்டத்தின் உள்ள மாணவ, மாணவியர் எண்ணிக்கை கூடுதல் ஆவதற்கு ஏற்ப உணவு தயாரிப்பது, வாகன வசதி, கூடுதல் ஊழியர் உள்ளிட்ட ஏற்பாடுகளும் ஜரூராக மேற்கொள்ளப்பட்டது. தாராபுரத்தில் இடைத்தேர்தல் நடப்பதால், தேர்தல் நடத்தை விதி அமலில் உள்ளதால், நம் மாவட்டத்தில் திட்டம் துவங்குவது என்ற கேள்வி எழுந்துள்ளது. அதே நேரம், ஏற்கனவே அமலில் உள்ள திட்டம் விரிவாக்கம் தான் என்பதால், அதற்கான முழுமையான ஏற்பாடுகள் முடிக்கப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது என்கின்றனர், மாவட்ட கல்வி அதிகாரிகள்.
திருப்பூர் மாவட்டத்தில் காலை உணவு திட்டத்தின் கீழ் பயன்பெறுவோர் எண்ணிக்கை, 53 ஆயிரத்து, 683 ஆக உயர்கிறது.


/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062524269z-nkn-png-logo-100x100-nakkheeran-adops.png)
