Politics
காலை உணவுத் திட்ட விரிவாக்கம்... செப்., 22 சென்னையில் தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் விஜய்!

ஒத்திவைக்கப்பட்டுள்ள பள்ளி மாணவர்களுக்கான காலை உணவுத் திட்ட விரிவாக்க நிகழ்ச்சியை முதல்வர் விஜய் சென்னையில் தொடங்கி வைப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
விருதுநகரில் நாளை முதலமைச்சர் பங்கேற்கவிருப்பதாக கூறப்பட்ட காமராஜர் காலை உணவுத் திட்ட விரிவாக்க நிகழ்ச்சி, செப்டம்பர் 25ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது. அரசுப் பள்ளிகளில் பயிலும் தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கான காலை உணவுத் திட்டத்தை 8 ஆம் வகுப்பு வரை விரிவாக்கம் செய்யவுள்ளதாக தமிழக அரசு அண்மையில் அறிவித்தது.
அதன்படி, இத்திட்டத்தை பெரியார் பிறந்த நாளான நாளைய தினம், காமராஜர் பயின்ற பள்ளியில் முதலமைச்சர் விஜய் தொடங்கி வைக்க உள்ளதாக கூறப்பட்டு வந்தது. இந்நிலையில், முதலமைச்சர் லண்டனில் இருப்பதால், காலை உணவுத் திட்ட விரிவாக்க நிகழ்ச்சி தற்போது செப்டம்பர் 22ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது.
அத்துடன் இந்நிகழ்ச்சி சென்னையிலேயே நடைபெறவுள்ளதாகவும் முதலமைச்சர் இதனை தொடங்கி வைப்பார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இடைத்தேர்தல் நடைபெறவுள்ள தாராபுரம் மற்றும் மதுராந்தகம் தொகுதிகளை தவிர்த்து மற்ற இடங்களில் இத்திட்டம் 22 ஆம் தேதியிலிருந்து செயல்பாட்டுக்கு வர உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
15,454 பள்ளிகளில், 6 முதல் 8 வரையிலான சுமார் 15 லட்சம் மாணவர்கள் இத்திட்டம் மூலம் புதிதாக பயன்பெறவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தால் ஏற்கெனவே ஐந்தாம் வகுப்பு வரை கிட்டத்தட்ட 18 லட்சம் மாணவர்கள் பயனடைந்து வருவது குறிப்பிடத்தக்கது.
