Politics
தி.மு.க.வின் முப்பெரும் விழாவுக்கான தேதி அறிவிப்பு!

தமிழகத்தின் முன்னாள் முதல்வர் பேரறிஞர் அண்ணாவின் 118ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் செப்டம்பர் 15, 2026 அன்று தி.மு.க.வின் முப்பெரும் விழா நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில், தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினுக்குத் திடீரென காய்ச்சல் மற்றும் உடல்நலக்குறைவு ஏற்பட்டது.
இதன் காரணமாக, அன்றைய தினம் நடைபெறவிருந்த முப்பெரும் விழா ஒத்திவைக்கப்படுவதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்திருந்தார். இந்நிலையில் ஒத்திவைக்கப்பட்ட தி.மு.க. முப்பெரும் விழா வரும் 19.09.2026 (சனிக்கிழமை) அன்று மாலை 5.00 மணியளவில், சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் எனத் தி.மு.க. தலைமைக் கழகம் அறிவித்துள்ளது.
முன்னதாக மு.க.ஸ்டாலின் எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “வைரஸ் தொற்றினால் ஏற்பட்ட காய்ச்சலைத் தொடர்ந்து, மருத்துவர்களின் அறிவுரைப்படி வீட்டிலேயே ஓய்வெடுத்து வருகிறேன். இதன் காரணமாக, ஏற்கெனவே திட்டமிடப்பட்டிருந்த நிகழ்ச்சிகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன” எனத் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062524269z-nkn-png-logo-100x100-nakkheeran-adops.png)