Politics
'திமுகவின் முப்பெரும் விழா ஒத்திவைப்பு'-துரைமுருகன் அறிவிப்பு

திமுகவின் முப்பெரும் விழா இன்று மாலை சென்னையில் நடைபெற இருந்த நிலையில் விழாவானது ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
அண்ணாவின் 118 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை அண்ணா அறிவாலயத்தில் கலைஞர் அரங்கில் திமுகவின் முப்பெரும் விழாவிற்கு இன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் இவ்விழாவானது ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக திமுகவின் பொதுச்செயலாளர் துரைமுருகன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்பொழுது பேசிய அவர், ''எங்களுடைய தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு திடீரென காய்ச்சல் ஏற்பட்டதன் காரணத்தால் காலையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு அவர் வர முடியவில்லை. மாலையில் நடைபெறுகின்ற நிகழ்ச்சியும் இன்றைக்கு ஒத்திவைக்கப்படுகிறது. தேதி பின்னர் அறிவிக்கப்படும்'' என்றார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062524269z-nkn-png-logo-100x100-nakkheeran-adops.png)