Politics
மு.க.ஸ்டாலினுக்கு உடல்நலக்குறைவு... திமுக முப்பெரும் விழா ஒத்திவைப்பு..
சென்னையில் இன்று நடைபெற இருந்த திமுக முப்பெரும் விழா ஒத்திவைப்பு. மு.க.ஸ்டாலினுக்கு உடல்நலக்குறைவு என தகவல் வெளியான நிலையில் துரைமுருகன் அறிவிப்பு.

சென்னையில் இன்று நடைபெற இருந்த திமுகவின் முப்பெரும் விழா ஒத்திவைக்கப்படுவதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியான நிலையில், முப்பெரும் விழா ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
மேலும், உடல்நலக்குறைவு காரணமாக பேரறிஞர் அண்ணா பிறந்த நாள் விழாவிலும் மு.க.ஸ்டாலின் இன்று பங்கேற்கவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திமுக முப்பெரும் விழா ஒத்திவைக்கப்பட்டதற்கான காரணம் குறித்து கட்சியின் பொதுச் செயலாளர் துரைமுருகன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.