Politics
இடைத்தேர்தல் 79 பேர் மனு தாக்கல்
சென்னை: மதுராந்தகம், தாரா புரம் இடைத்தேர்தலில் போட்டியிட, 79 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.
வரும் அக்டோபர் 6ல், மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளில் இடைத்தேர்தல் நடக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த, 9ம் தேதி தொடங்கியது.
கடைசி நாளான நேற்று பிற்பகல் 3:00 மணி வரை, மதுராந்தகம் தொகுதியில் போட்டியிட, 40 பேரும், தாராபுரம் தொகுதியில் போட்டியிட, 39 பேரும் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.
இரு தொகுதி களிலும் த.வெ.க., - தி.மு.க., - அ.தி.மு.க., - நா.த.க., - கம்யூனிஸ்ட் கட்சிகள் என, ஐந்து முனை போட்டி ஏற்பட்டுள்ளது.