Politics
22ல் காலை உணவு திட்டம் விரிவாக்கம் பயனடையும் 21,487 மாணவ, மாணவியர்
கரூர்,:வரும். 22ல் காலை உணவு திட்டம் விரிவாக்கம் செய்யப்பட உள்ள நிலையில், 21,487 கரூர் மாவட்ட மாணவ, மாணவியர் பயன் பெறுவர்.
தமிழகத்தில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், 1 முதல் 6-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு காலை உணவு திட்டம் வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆட்சியில், 8-ம் வகுப்பு வரை விரிவாக்கம் செய்யப்பட்டு, காமராஜர் காலை உணவு திட்டம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை, வரும், 22ல், முதல்வர் விஜய் தொடங்கி வைக்க உள்ளார்.
இதன்படி கரூர் மாநகராட்சியில், 30 பள்ளிகளில், 2,936 மாணவர்கள், குளித்தலை நகராட்சியில், 6 பள்ளிகளில், 805 பேர், பள்ளப்பட்டி நகராட்சியில், 9 பள்ளிகளில், 1,439 பேர், புகழூர் நகராட்சியில், 7 பள்ளிகளில், 407 பேர் உள்ளனர். கரூர் ஊராட்சி ஒன்றியத்தில், 19 பள்ளிகளில், 919 மாணவர், தான்தோன்றிமலையில், 26 பள்ளிகளில், 1,871 பேர், அரவக்குறிச்சியில், 16 பள்ளிகளில், 818 பேர், க.பரமத்தியில், 28 பள்ளிகளில், 915 பேர், குளித்தலையில், 28 பள்ளிகளில், 3,047 பேர், கிருஷ்ணராயபுரத்தில், 18 பள்ளிகளில், 1,853 பேர், கடவூரில், 34 பள்ளிகளில், 2,962 பேர் உள்பட மொத்தம், 310 பள்ளிகளில் பயிலும், 21,487 மாணவ, மாணவியர் பயன் பெறுவர்.
காலை உணவு திட்டத்தின் மூலம் மாணவ, மாணவியர் பள்ளிக்கு தவறாமல் வருகை புரிவதையும், ஊட்டச்சத்து நிறைந்த உணவை பெற்று உடல் மற்றும் மனநலத்துடன் கல்வி கற்பதையும் உறுதி செய்யும் வகையில், இத்திட்டத்தின் செயல்பாடுகள் தொடர்ந்து கண்காணிக்கப்படும் என, அதிகாரிகள்
தெரிவித்தனர்.