Politics
மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: வேட்புமனு தாக்கல் நிறைவு

சென்னை: மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நிறைவு பெற்றது. இரண்டு தொகுதிகளிலும் ஐந்து முனை போட்டி நிலவுகிறது.
அதிமுக சார்பில் வெற்றி பெற்ற சத்தியபாமா, மரகதம் குமரவேல் ஆகியோர் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்ததால் தாராபுரம், மதுராந்தகம் ஆகிய தொகுதிகளில் வரும் அக்.,6 ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 9 ம் தேதி துவங்கியது. தவெக, திமுக, அதிமுக, நாம் தமிழர், கம்யூனிஸ்ட் கட்சிகள் களமிறங்கி உள்ளதால், ஐந்து முனை போட்டி நிலவுகிறது. வேட்புமனு தாக்கல் இன்று(செப்.,16) நிறைவு பெற்றது.
கடைசி நாளான இன்று, கம்யூனிஸ்ட் வேட்பாளர்கள், தாராபுரம் தொகுதியில் தவெக வேட்பாளர் சத்யபாமா, நாதக வேட்பாளர் கார்த்திகா, மதுராந்தகம் தொகுதியில் அதிமுக வேட்பாளர் கணிதா சம்பத் ஆகியோர் இன்று வேட்புமனு தாக்கல் செய்தனர்.
வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நாளை நடைபெறுகிறது. 18 ம் தேதி வரை வேட்புமனுவை திரும்ப பெற்றுக் கொள்ளலாம். அக்டோபர் 6 ல் தேர்தலும், 9 ம் தேதி ஓட்டு எண்ணிக்கையும் நடக்கிறது.
மார்க்சிஸ்ட்- சுகந்தி ஆகியோர் போட்டியிடுகின்றனர். இவர்களை தவிர்த்து சுயேச்சை வேட்பாளர்களும் களமிறங்கி உள்ளனர்.