Lifestyle and human interest
திருச்சியில் 5 கோவில்களில் போன் பாதுகாப்பு இலவசம்
ஸ்ரீரங்கம்: தமிழகத்தில், செப்., 1 முதல், முதன்மை கோவில்களுக்குள் மொபைல்போனுக்கு தடை விதிக்கப்பட்டதால், 52 கோவில்களில், பக்தர்களின் மொபைல்போன்களை பாதுகாக்க அறை வசதி ஏற்படுத்தப்பட்டது. அதற்காக, 5 ரூபாய் வசூலிக்கப்பட்டது.
ஆனால், திருச்சியில், ஸ்ரீரங்கம் ரெங்கநாதர், சமயபுரம் மாரியம்மன், மலைக்கோட்டை தாயுமானவ சுவாமி, திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர், உறையூர் வெக்காளியம்மன் ஆகிய கோவில்களில், டோக்கன் கொடுக்கும் இடத்தில், சில்லரை தட்டுப்பாடால் அவ்வப்போது வாக்குவாதம் ஏற்பட்டது.
அறநிலையத்துறைக்கு தொடர் புகார்கள் வந்ததால், திருச்சியில் உள்ள ஐந்து பிரதான கோவில்களிலும், மொபைல்போன் பாதுகாக்க கட்டணம் வசூலிக்கும் முறை ரத்து செய்யப்பட்டுள்ளது. பக்தர்கள், பாதுகாப்பு அறை லாக்கரில் போன்களை வைத்து, டோக்கன் மட்டும் பெற்றுச்செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.