Politics
த.வெ.க., வேட்பாளருக்கு எதிராக கோஷம் எழுப்பிய அ.தி.மு.க.,வினர்
தாராபுரம்:தாராபுரத்தில், வேட்பு மனு தாக்கல் செய்து விட்டு, வெளியே வந்த த.வெ.க., வேட்பாளர் சத்தியபாமாவை
வேட்பு மனு தாக்கல் செய்து விட்டு, வெளியே வந்த த.வெ.க., வேட்பாளர்
சத்தியபாமாவை பார்த்து, அ.தி.மு.க.,வினர் கடுமையான கோஷம்
எழுப்பியது பரபரப்பை ஏற்படுத்தியது.
தாராபுரத்தில் நடைபெறும் இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்காக,
தாராபுரம் ஆர்.டி.ஓ., அலுவலகத்தில், ஆர்.டி.ஓ., பெலிக்ஸ் ராஜாவிடம்
நேற்று காலை, 11:15 மணியளவில் அமைச்சர்கள் செங்கோட்டையன், ஆனந்த்,
அருண்ராஜ் ஆகியோர் முன்னிலையில், த.வெ.க., வேட்பாளர் சத்தியபாமா,
தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். பின்னர், தங்களது கார்களில் ஏறி
சென்றனர் அப்போது, எதிரே வேட்பு மனு தாக்கல் செய்வதற்காக, அ.தி.மு.க.,
வேட்பாளர் பானுமதி ஊர்வலமாக வந்து கொண்டிருந்தார்.
ஊர்வலத்தில் வந்தவர்கள், எதிரே காரில் வந்த அமைச்சர்கள் மற்றும்
சத்தியபாமாவை பார்த்து 'பச்சை துரோகி' என்று கூறி கோஷமிட்டனர்.
எங்களிடம் ஓட்டுகளை வாங்கி விட்டு, கட்சி மாறி விட்டாயே என,
கடுமையான முறையில், அ.தி.மு.க., தொண்டர்கள் கோஷம் எழுப்பி
கூச்சலிட்டனர். இதனால், அங்கு பரபரப்பான சூழ்நிலை காணப்பட்டது.