Politics
விளம்பர பலகை செலவை வழங்க கோரி தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மனு
கரூர்;காலை உணவு திட்டம் விரிவாக்கம் செய்வதற்காக வைத்த, விளம்பர பலகை செலவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

உணவு திட்டம் விரிவாக்கம் செய்வதற்காக வைத்த, விளம்பர பலகை செலவை
வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, தமிழ்நாடு தொடக்கப்பள்ளி
ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலர் மணிகண்டன், கரூர் கலெக்டர்
அலுவலகத்தில், டி.ஆர்.ஓ., விமல்ராஜிடம் மனு அளித்தார்.
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், காமராஜர் காலை உணவு திட்டம்
விரிவாக்கம் வரும், 22ல் முதல்வர் விஜய் தொடங்கி வைக்கிறார். கரூர்
மாவட்டத்தில் உள்ள அனைத்து நிலைப்பள்ளிகளிலும், காமராஜர் காலை உணவு
திட்டம் என்ற பெயர் பலகை 4க்கு2 அடி அளவுடன் கடந்த, 7ம் தேதிக்குள்
பொருத்த வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது.
பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களும் அரசின் உத்தரதவை ஏற்று, 1,200
ரூபாய் செலவில் பெயர்பலகையை நிறுவியுள்ளனர்.
உத்தரவுன்படி, ஊரக பொது நிதியிலிருந்து, பெயர் பலகைக்கு உரிய செலவு
வழங்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது. இது குறித்து, அந்த துறை
அதிகாரிகளிடம் கேட்டால், முறையாக பதில் அளிக்கவில்லை. இதற்குரிய
தொகையை பொதுநிதியிலிருந்து வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு, கூறப்பட்டுள்ளது.