Arts, culture, entertainment and media
நடிகர் அஜித் குமாரின் 'Gladiators' திரைப்பட டிரெய்லர் சிறப்பு வெளியீடு..! திரையரங்கில் அஜித் ரசிகர்கள் கொண்...

நடிகர் அஜித் குமாரின் நிஜ வாழ்க்கை சர்வதேச கார் பந்தயப் பயணத்தை மையமாகக் கொண்ட 'கிளாடியேட்டர்ஸ்' ஆவணப்படத்தின் டிரெய்லர் சிறப்பு பிரீமியர் சேலத்தில் திரையிடப்பட்டது.
நடிகர் அஜித் குமாரின் நிஜ வாழ்க்கை சர்வதேச கார் பந்தயப் பயணத்தை மையமாகக் கொண்ட 'கிளாடியேட்டர்ஸ்' ஆவணப்படத்தின் டிரெய்லர் சிறப்பு பிரீமியர் நேற்று மாலை 6.40 மணியளவில் ரசிகர்களுக்காகத் திரையிடப்பட்டது. தமிழகத்தில் ஒரு சில திரையரங்குகளில் வெளியிடப்பட்ட இந்த டிரெய்லர், சேலத்தில் ஆஸ்கர் மற்றும் ராக்ஸ் திரையரங்குகளில் திரையிடப்பட்டது.
இந்த சிறப்பு பிரீமியர் டிரெய்லர் காட்சியை அஜித் ரசிகர்கள் ஆரவாரத்துடன் கொண்டாடி மகிழ்ந்தனர். ரசிகர்கள் கருத்து தெரிவிக்கையில், தமிழ் சினிமாவில் ஆவணப்படம் தயாரிப்பது அரிது என்றும், தல அஜித் அவர்களின் கார் ரேசிங் குறித்த ஆவணப்படத்தின் டிரெய்லர் அற்புதமாக இருந்ததாகவும் தெரிவித்தனர்.
குட் பேட் அக்லி திரைப்படத்திற்குப் பிறகு நீண்ட இடைவெளிக்குப் பிறகு அஜித்தை திரையில் பார்த்தது மகிழ்ச்சி அளித்ததாக ரசிகர்கள் கூறினர். திரையரங்கை திருவிழா போல கொண்டாடியதாகவும், அஜித்துக்கு சினிமா மீதுள்ள ஆர்வத்தை விட ரேசிங் மீது பல மடங்கு ஆர்வம் இருப்பதாகவும் அவர்கள் குறிப்பிட்டனர்.
இந்தத் திரைப்படம் ரேசிங்கில் அவர் ஆரம்ப காலம் முதல் தற்போது வரை பட்டுள்ள கஷ்டங்களை ஆவணப்படுத்துகிறது என்றும், டிரெய்லரைப் பார்த்த பிறகு படம் எப்போது வெளியாகும் என்ற உணர்வு ஏற்பட்டதாகவும் ரசிகர்கள் தெரிவித்தனர்.
ரசிகர்கள் மேலும் கூறுகையில், அஜித் ஆண்டுக்கு ஒரு படம் நடித்தாலே போதும் என்றும், அவர் எந்தக் கஷ்டமும் பட வேண்டாம் என்றும் தெரிவித்தனர். அஜித்தின் புகைப்படத்தை கூட இரண்டரை மணி நேரம் திரையில் பார்ப்போம் என்றும், நாடி நரம்பு ரத்தம் எல்லாம் தல தான் என்றும் அவர்கள் உணர்ச்சிவசப்பட்டனர்.
பத்மபூஷன் ரேசிங் ஃபெஸ்டிவலுக்காக காத்திருப்பதாகவும், இந்தத் திரைப்படம் எப்போது திரைக்கு வருகிறதோ அப்போதுதான் தீபாவளி பொங்கல் என்றும் அஜித் ரசிகர்கள் தெரிவித்தனர்.
