Politics
திமுக முப்பெரும் விழா நடைபெறும் புதிய தேதி அறிவிப்பு

திமுக முப்பெரும் விழா செப்டம்பர் 15-ல் இருந்து 19-க்கு ஒத்திவைக்கப்பட்டது. ஸ்டாலினுக்கு காய்ச்சல் காரணமாக விழா ஒத்திவைக்கப்பட்டது.
முன்னாள் முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலினுக்கு திடீர் காய்ச்சல் காரணமாக செப்டம்பர் 15 ஆம் தேதி நடைபெற இருந்த திமுக முப்பெரும் விழா ஒத்திவைக்கப்பட்ட நிலையில் வரும் 19 ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
திமுகவில் ஆண்டுதோறும் முப்பெரும் விழா கொண்டாடப்பட்டு வருகிறது. திமுக தொடங்கிய நாள் (செப்டம்பர் 17), பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் (செப்டம்பர் 15) மற்றும் பெரியார் பிறந்தநாளான (செப்டம்பர் 17) என மூன்று முக்கிய நிகழ்வுகளையும் ஒன்றாக நடத்தும் வகையில், ஆண்டுதோறும் திமுக முப்பெரும் விழா கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்த முப்பெரும் விழாவின் போது, தி.மு.க. சார்பில் பெரியார் விருது, அண்ணா விருது, கலைஞர் விருது, பாவேந்தர் விருது, பேராசிரியர் விருது, மு.க.ஸ்டாலின் விருது ஆகியவை வழங்கப்படும். அந்த வகையில் இந்த ஆண்டுக்கான தி.மு.க. முப்பெரும் விழா 15-ந்தேதி சென்னை அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. முப்பெரும் விழாவில் விருது பெறுவோரின் பெயர்களும் அறிக்கப்பட்டிருந்தது.
ஆனால் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டதன் காரணமாக செப்டம்பர் 15 ஆம் தேதி நடைபெறவிருந்த திமுக முப்பெரும் விழா ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் வரும் செப்டம்பர் 19 ஆம் தேதி சென்னை அறிவலாயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் மாலை 5.30 மணிக்கு முப்பெரும் விழா நடைபெறும் என திமுக அறிவித்துள்ளது.
திமுக முப்பெரும் விழாவில் விருது பெறுவோர் பட்டியல்
பெரியார் விருது - விவசாய அணி துணைச் செயலாளர் கு. செல்லப்பா
அண்ணா விருது - சேலம் மத்திய மாவட்ட அவைத் தலைவர் சேலம் ஜி.கே.சுபாஷ்
கலைஞர் விருது -துணைப் பொதுச் செயலாளரும், தி.மு.க.மாநிலங்களவை குழுத் தலைவருமான திருச்சி சிவா
பாவேந்தர் விருது - மருத்துவ அணித் தலைவரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி என்.வி.என். சோமு
பேராசிரியர் விருது - தலைமைச் செயற்குழு உறுப்பினர் மிசா எஸ். அகமது தம்பி
மு.க.ஸ்டாலின் விருது - இளைஞர் அணி துணைச் செயலர் நா. இளையராஜா
பேராசிரியர் விருது: மிசா எஸ். அகமது தம்பி (தலைமைச் செயற்குழு உறுப்பினர்)பெருந்தலைவர்
முரசொலி செல்வம் விருது (முரசொலி அறக்கட்டளை சார்பில்): ப. திருமாவேலன் (ஊடகவியலாளர் மற்றும் எழுத்தாளர்)
