Politics
அ.தி.மு.க., வேட்பாளர் கணிதா வேட்பு மனு தாக்கல்

மதுராந்தகம்:மதுராந்தகம் சட்டசபை இடைத்தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க., வேட்பாளர் கணிதா நேற்று, வேட்பு மனு தாக்கல் செய்தார்.
மதுராந்தகம் சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க., சார்பில் கணிதா என்பவர் போட்டியிடுவதாக, அக்கட்சியின் தலைமை கடந்த வாரம் அறிவித்தது. இதையடுத்து தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள கட்சி நிர்வாகிகளை சந்தித்து வேட்பாளர் கணிதா, இருதினங்களுக்கு முன் ஆதரவு திரட்டினார்; அதன்பின் வேட்பாளர் அறிமுக கூட்டம் நடந்தது.
இந்நிலையில், மதுராந்தகம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில், தேர்தல் நடத்தும் அலுவலர் நரேந்திரனிடம் அ.தி.மு.க., வேட்பாளர் கணிதா நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார். முன்னதாக, கூட்டணி கட்சியினருடன் ஊர்வலமாக சென்று, எம்.ஜி.ஆர்., மற்றும் அம்பேத்கர் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார்.
இந்நிகழ்வில், செங்கல்பட்டு மாவட்ட அ.தி.மு.க., செயலர் ஆறுமுகம், அ.தி.மு.க., அமைப்பு செயலர் கணேசன் மற்றும் பா.ஜ., கட்சியினர் உள்ளிட்ட பலரும் உடன் இருந்தனர்.