Politics
இடைத் தேர்தல்; வேட்புமனு தாக்கல் நிறைவு! களத்தில் இருக்கும் வேட்பாளர்கள் யார்?
மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் வேட்புமனு தாக்கல் நிறைவு.

தமிழ்நாட்டில் முதலமைச்சர் விஜய் ராஜினாமா செய்த திருச்சி கிழக்கு உட்பட ஏழு தொகுதிகள் காலியாக உள்ள நிலையில், மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரண்டு தொகுதிகளைத் தவிர்த்து மற்றத் தொகுதிகள் தொடர்பான தேர்தல் வழக்குகள் நிலுவையில் உள்ள காரணத்தால், இரண்டு தொகுதிகளுக்கு மட்டும் இந்தியத் தேர்தல் ஆணையம் இடைத் தேர்தலை அறிவித்துள்ளது.
அதன்படி வரும் அக்டோபர் 6ஆம் தேதி தமிழ்நாட்டில் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரண்டு தொகுதிகளுக்கு இடைத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 9ஆம் தேதி தொடங்கி நடைபெற்றுவந்த நிலையில், இன்று (16ஆம் தேதி) பிற்பகல் 3 மணியோடு நிறைவடைந்தது.
கடந்த சட்டமன்றத் தேர்தலில் நான்கு முனை போட்டியாக இருந்த களம் தற்போது ஐந்து முனை போட்டியாக மாறியுள்ளது. அதன்படி, தவெக, திமுக, அதிமுக, நாதக மற்றும் இடதுசாரிகள் ஆகியவை களத்தில் உள்ளன.
இதில், மதுராந்தகம் தொகுதியில், பரந்தாமன் (திமுக), கனிதா சம்பத் (அதிமுக), மரகதம் குமரவேல் (தவெக), சுகந்தி (சிபிஎம்) மற்றும் ஜானகிராமன் ஆகியோர் போட்டியிடுகின்றனர். அதேபோல் தாராபுரம் தொகுதியில், சுகன்யா (திமுக), பானுமதி (அதிமுக), சத்தியபாமா (தவெக), லட்சுமணன் (சிபிஐ) மற்றும் கார்த்திகா ஆகியோரும் போட்டியிடுகின்றனர்.
வேட்பாளர்கள் தங்கள் வேட்புமனுக்களை தாக்கல் செய்துள்ள நிலையில், நாளை (17ஆம் தேதி) வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நடைபெற இருக்கிறது. இதனைத் தொடர்ந்து வரும் 19ஆம் தேதிக்குள் வேட்பாளர்கள் தங்கள் வேட்புமனுவை திரும்பப் பெறலாம். பின் வரும் அக்டோபர் 6ஆம் தேதி வாக்குப் பதிவு நடைபெற்று, அக்டோபர் 9ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற இருக்கிறது.
டெங்கு பரவல்: “கர்ப்பிணிகளுக்கான சிகிச்சையில் கூடுதல் கவனம் வேண்டும்” - பொது சுகாதாரத்துறை!
பாதிப்புடன் வரும் கர்ப்பிணிகளை அலட்சியப்படுத்தாமல் கண்காணிக்க வேண்டும்.
காய்ச்சல் பாதிப்புள்ள கர்ப்பிணிகளை தொடர் கண்காணிப்பில் வைத்திருக்க வேண்டும்.
தமிழ்நாட்டில் டெங்கு பரவல் அதிகரித்துள்ள நிலையில் பொதுசுகாதாரத்துறை எச்சரிக்கை.
