Lifestyle and human interest
தொடர் மழையால் டெங்கு பரவும் அபாயம்
கம்பம், செப். 18 தொடர்ந்து மாலையில் பெய்து வரும் மழையால் டெங்கு காய்ச்சல் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
தொடர்ந்து மாலையில் பெய்து வரும் மழையால் டெங்கு காய்ச்சல் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
கம்பம் பள்ளத்தாக்கில் கடந்த 2 வாரங்களாக பகலில் கடும் வெப்பமும், மாலையில் மழையும் பெய்து வருகிறது. மழை தொடர்ந்து பெய்வதால் மழை நீர் சிரட்டை, பள்ளங்களில் தேங்கி நிற்கும் வாய்ப்பு அதிகம். இது போன்ற நன்னீரில் தான் டெங்குவை பரப்பும் ஏடிஎஸ் வகை கொசுக்கள் உற்பத்தியாகிறது. மேலும் வீடுகளில் இருப்பு வைக்கப்படும் குடிநீரிலும் டெங்கு பரப்பும் கொசு வளர வாய்ப்புள்ளது.
எனவே டெங்கு காய்ச்சல் பரவலை தடுக்க சுகாதாரத் துறையினர் தயார் நிலையில் உள்ளனர். மழை நீரை வீடுகளின் அருகில் தேங்காமல் பார்த்துக் கொள்ளவும், வீடுகளில் குடிதண்ணீரை மூடி வைக்கவும், அதிக நாட்களுக்கு குடிநீரை இருப்பு வைக்க வேண்டாம் என்றும் சுகாதாரத்துறையினர் வலியுறுத்தி வருகின்றனர்.
அரசு மருத்துவமனைகளிலும், ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் காய்ச்சல் சிகிச்சைக்கு வருபவர்களின் ரத்தம் ஆய்வக பரிசோதனைக்கு உட்படுத்தி வருகின்றனர்.


/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062524269z-nkn-png-logo-100x100-nakkheeran-adops.png)
