Lifestyle and human interest
காய்ச்சல் பரவல் அதிகரிப்பு:பொது இடங்களில் முகக்கவசம் அணிய வேண்டும்- அமைச்சர் அருண்ராஜ் பேட்டி
சென்னை,சென்னை மருத்துவக்கல்லூரியில், 192-வது மருத்துவ இளநிலை மாணவர் சேர்க்கை வரவேற்பு நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில் பங்கேற்ற சுகாதாரத்துறை அமைச்சர் அருண்ராஜ்

சென்னை மருத்துவக்கல்லூரியில், 192-வது மருத்துவ இளநிலை மாணவர் சேர்க்கை வரவேற்பு நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில் பங்கேற்ற சுகாதாரத்துறை அமைச்சர் அருண்ராஜ் நிருபர்களிடம் கூறியதாவது:-பட்டினப்பாக்கத்தில் தலைமை செயலகம் தொடர்பாக மீனவர்களிடம் பேசி, அதன் நோக்கம் குறித்து புரிய வைப்போம்.தற்போது, சுவாசத்தொற்று பரவல் அதிகமாக உள்ளது. அரசு தடுப்பு நடவ டிக்கை எடுத்து வருகிறது.
பொதுமக்களும் எச்சரிக்கையாக இருக்க வேண் டும். காய்ச்சல் போன்ற பாதிப்புகள் இருந்தால் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாதீர்கள். பொது இடங்களுக்கு செல்லும்போது முகக்கவசம் அணிய வேண்டும். டெங்கு காய்ச்சல் பரவலும் உள்ளது. இந்த ஆண்டில் இது வரை, தமிழகத்தில் டெங்கு காய்ச்சலால், 15,933 பேர் பாதிக்கப்பட்டுள்ள னர். 9 பேர் உயிரிழந்துள்ளனர். அனைத்து அரசு ஆஸ்பத்திரிகளிலும் டெங் குவுக்கு முறையான சிகிச்சை அளிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.