எங்கள் கட்சி வெற்றி பெற்றால் தலைக்கு 5 ஆயிரம் டாலர்; அதிபர் டிரம்ப் அறிவிப்பு
வாஷிங்டன்: வரும் நவம்பரில் நடக்கவிருக்கும் அமெரிக்க பார்லிமென்ட் தேர்தலில் எங்கள் கட்சி வெற்றி பெற்றால், ஒவ்வொரு அமெரிக்கருக்கும் 5 ஆயிரம் டாலர் (ரூ.4.76 லட்சம்) வழங்கப்படும் என அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார்.
அமெரிக்காவில், ஒவ்வொரு நான்கு வருடங்களுக்கு ஒருமுறை நவம்பர் மாதத்தின் முதல் திங்கட்கிழமைக்கு அடுத்து வரும் செவ்வாய்க்கிழமை அன்று நடைபெறும்; அடுத்த அமெரிக்க அதிபர் தேர்தல் 2028ம் ஆண்டு நவம்பர் 7ம் தேதி நடைபெற உள்ளது.
அதிபரின் பதவிக்காலத்தில் பாதி முடிந்த நிலையில், பார்லிமென்ட், செனட் உறுப்பினர் பதவிகளுக்கும், பல மாநில கவர்னர், மேயர், உள்ளாட்சி அமைப்புகளின் பதவிகளுக்கும் தேர்தல் நடத்தப்படும். இந்த ஆண்டு நவம்பரில் தேர்தல் நடத்தப்பட உள்ளது.


/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062524269z-nkn-png-logo-100x100-nakkheeran-adops.png)





