Politics
”காங்கிரஸ் திட்டங்களை ட்ரம்ப் காப்பி அடிக்கிறார்”; - கர்நாடகா முதல்வர் சிவக்குமார்

கர்நாடக மாநிலம், தலைநகர் பெங்களூரில் காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் அம்மாநில முதல்வர் டி.கே.சிவகுமார் கலந்துகொண்டார். அப்போது, அவர் பேசுகையில், ”கர்நாடகத்தில் காங்கிரஸ் அரசு செயல்படுத்தி வரும் நலத்திட்டங்களைப் பார்த்துத் தான் பிற மாநிலங்கள், ஏன்? அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கூடத் தங்கள் அரசின் திட்டங்களைத் தீட்டி வருகிறார்” என்று பெருமிதத்துடன் தெரிவித்தார்.
அமெரிக்காவில் வருகின்ற நவம்பர் மாதத்தில் நடைபெற உள்ள இடைக்கால தேர்தலை முன்னிட்டு குடியரசு கட்சி சார்பில் அதிபர் ட்ரம் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது, டெக்ஸாஸின் டெல்லாஸ் நகரில் செப்டம்பர் 9 அன்று பிரச்சாரம் மேற்கொண்ட அதிபர் ட்ரம்ப், வருகின்ற தேர்தலில் தங்களின் குடியரசு கட்சி வெற்றி பெற்றால், அனைத்து வயது வந்த அமெரிக்கக் குடிமக்களுக்கும் தலா 5 ஆயிரம் அமெரிக்க டாலர் (ரூ.4.79 லட்சம்) வழங்கப்படும் என்று வாக்குறுதி அளித்திருந்தார். இது உலக அளவில் பேசுபொருளாக மாறியுள்ளது.
இந்த திட்டத்தைக் குறிப்பிட்டுப் பேசிய சிவகுமார், கர்நாடகத்தில் ஆட்சி பொறுப்பேற்றுள்ள காங்கிரஸ் கட்சியின் நலத்திட்டங்களை மராட்டியம், மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் பீகார் உள்ளிட்ட மாநிலங்கள் பின்பற்றி வருகின்றன. இந்நிலையில், அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பும் காங்கிரஸின் நலத்திட்டங்களைக் காப்பி அடிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர், இன்றைக்கு உலக நாடுகள் இந்திய அரசியலமைப்பை உற்றுநோக்குகின்றன. எனினும், பாஜக அரசு இந்துத்துவத்தையும், மதத்தையும் தங்களின் அரசியல் ஆதாயத்திற்காகப் பயன்படுத்தி வருகிறது. ராமர் கோயிலுக்காக மக்கள் வழங்கிய நிதியையும், காணிக்கைகளையும் தவறான முறையில் பயன்படுத்தியுள்ளது. எனவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062524269z-nkn-png-logo-100x100-nakkheeran-adops.png)