உப்பூரில் வெயிலுகந்த விநாயகர் கோயில் சதுர்த்தி விழா துவக்கம்
இன்று காலை கொடியேற்றம்ஆர்.எஸ்.மங்கலம்: உப்பூர் வெயிலுகந்த விநாயகர் கோயில் கொடியேற்றம் இன்று காலை 7:45
ஆர்.எஸ்.மங்கலம்: உப்பூர் வெயிலுகந்த விநாயகர் கோயில் கொடியேற்றம் இன்று காலை 7:45 மணிக்கு நடப்பதால் விழா ஏற்பாடுகள் தீவிரமடைந்துள்ளன.
ஆர்.எஸ்.மங்கலம் அருகே உப்பூரில் பிரசித்தி பெற்ற விநாயகர் கோயில் உள்ளது. இக்கோயில் விநாயகர் மீது பகல் முழுவதும் சூரிய ஒளி படும் வகையில் கருவறை அமையப்பெற்றுள்ளதால், இந்த விநாயகர் வெயிலுகந்த விநாயகர் என அழைக்கப்படுகிறார். இங்கு ஆண்டு தோறும் சதுர்த்தி விழா பத்து நாட்கள் நடக்கிறது.
இந்த ஆண்டு விழா இன்று(செப்.5) காலை 7:45 மணிக்கு சதுர்த்தி விழா கொடியேற்றத்துடன் துவங்குகிறது.





