Religion
சதுர்த்தி விழா இன்று கொடியேற்றம்
விருத்தாசலம்: விருத்தாசலம் மணவாளநல்லுார் கொளஞ்சியப்பர் கோவில் நிர்வாகத்தின் கீழ் இயங்கும், ஆற்றங்கரை சித்தி விநாயகர் கோவிலில், சதுர்த்தி பெருவிழா இன்று துவங்குகிறது.
அதனையொட்டி இன்று காலை 7:00 மணிக்கு சுவாமிக்கு சிறப்பு பூஜையை தொடர்ந்து 9:00 மணிக்குள் கொடியேற்றம் நடக்கிறது. தினசரி சித்தி விநாயகருக்கு சிறப்பு அபிேஷக ஆராதனை நடக்கிறது. வரும் 14ம் தேதி விநாயகர் சதுர்த்தியன்று சுவாமி சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா நடக்கிறது.