Religion
உப்பூர் விநாயகர் கோயில் சதுர்த்தி விழா துவக்கம்: செப்.12ல் திருக்கல்யாணம்

ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் அருகே உப்பூர் வெயிலுகந்த விநாயகர் கோயில் சதுர்த்தி விழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. முக்கிய நிகழ்ச்சியாக செப்.12ல் சித்தி, புத்தி உடன் விநாயகருக்கு திருக்கல்யாணம் நடக்கிறது.
இக்கோயிலில் மூலவர் மீது பகல் முழுவதும் சூரிய ஒளிபடும் வகையில் கருவறை அமைக்கப்பட்டுள்ளது. நேற்று காலையில் கொடி மரத்தில் கொடியேற்றப்பட்டு சதுர்த்தி விழா துவங்கியது. தினமும் மாலையில் வெள்ளி மூஷிகம், சிம்மம், மயில், யானை, ரிஷபம், காமதேனு, குதிரை உள்ளிட்ட வாகனங்களில் விநாயகர் வீதியுலா நடக்கிறது. செப்.12 ல், சித்தி, புத்தி தேவியர்களுடன் விநாயகருக்கு திருக்கல்யாணம் நடக்கிறது. வட மாநிலங்களில் மட்டுமே விநாயகருக்கு திருக்கல்யாணம் நடைபெறும் நிலையில், இங்கும் நடப்பது சிறப்பு மிக்கது.
செப்.13ல் தேரோட்டம், செப். 14 ல் சதுர்த்தி தீர்த்தவாரியுடன் விழா நிறைவடைகிறது.