கால பைரவருக்கு ஆறுகால பூஜை
திண்டுக்கல்: திண்டுக்கல் தாடிக்கொம்பு சவுந்தரராஜ பெருமாள் கோயிலில் தேய்பிறை அஷ்டமி அன்று பைரவருக்கு ஆறுகால பூஜைகள் நடக்கிறது. கடன் தொல்லை, வறுமை நீங்கும், சனி பாதிப்புகள் குறையும் என்பதால் ஏராளமான பக்தர்கள் இப்பூஜையில் பங்கேற்று வருகின்றனர்.
நேற்று தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு காலபைரவருக்கு ஆறு கால பூஜைகள் நடந்தன. இதில் காலபைரவருக்கு சிறப்பு அபிேஷகம், பூக்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனைகள் நடந்தது. பக்தர்கள் செவ்வரளி மலர்கள் சூட்டி, மிளகு சாதம், தயிர் சாதம், வடைமாலை நைவேத்தியமாக படைத்து வழிபட்டனர்.
மேலும் நல்லெண்ணெய், இலுப்பை, விளக்கெண்ணெய், பசு நெய், தேங்காய் எண்ணெய் ஆகியவற்றால் தீபம் ஏற்றி காலபைரவர் மந்திரம், காயத்ரி மூலமந்திரம் கூறி வழிபாடு நடத்தினர். ஏற்பாடுகளை கோயில் நிர்வாகம் செய்திருந்தது.


