மேகபாலீஸ்வரர் கோவிலில் தேய்பிறை அஷ்டமி பூஜை

கரூர்:நன்செய் புகழூர் மேகபாலீஸ்வரர் கோவிலில், ஆவணி மாத தேய்பிறை அஷ்டமியை யொட்டி, சிறப்பு பூஜைகள் நேற்று மாலை நடந்தன.
மூலவர் கால பைரவருக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம்,
திருமஞ்சனம், குங்குமம் உள்ளிட்ட, 18 வகையான வாசனை திரவியங்கள்
மூலம் அபி ேஷகம் நடந்தது. காலபைரவர் சிறப்பு பூக்கள் அலங்காரத்தில்
பக்தர்களுக்கு காட்சியளித்தார். மஹா தீபாராதனைக்கு பிறகு,
பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
பசுபதீஸ்வரர் கோவில், புன்னம் புன்னைவன நாதர் உடனுறை, புன்னைவன
நாயகி கோவில், திருகாடுதுறை மாதேஸ்வரன் கோவில், நத்தமேடு ஈஸ்வரன்
கோவில்களில், ஆவணி மாத தேய்பிறை அஷ்டமியையொட்டி, கால பைரவருக்கு
சிறப்பு பூஜை நடந்தது.