தேய்பிறை அஷ்டமியை ஒட்டி பைரவருக்கு பூஜை

தலைவாசல்; தேய்பிறை அஷ்டமியை ஒட்டி, தலைவாசல், ஆறகளூரில் உள்ள காமநாதீஸ்வரர் கோவிலில் நேற்று காலபைரவருக்கு, பால், நெய், தயிர், மஞ்சள், சந்தனம், தேன் உள்பட, 16 வகை அபி ேஷக பூஜைகள் செய்யப்பட்டன. தொடர்ந்து வெள்ளி கவசம், புஷ்ப அலங்காரத்தில் கால பைரவர் அருள்பாலித்தார். இதில் திருமணத்-தடை, கடன் உள்ளிட்ட பிரச்னைகள் நீங்க, தீபம் ஏற்றி பக்தர்கள் வழிபட்டனர்.
ஆத்துார் கைலாசநாதர் கோவிலில் உள்ள பிரித்-தியங்கிராதேவிக்கு சிறப்பு யாகம் நடந்தது. பின் புஷ்ப அலங்காரத்தில் தேவி, ஸ்வர்ண பைரவர் அருள்பாலித்தனர்.அதேபோல் தென்பொன்பரப்பி சொர்ணபுரீஸ்வரர் கோவிலில் சந்தன காப்பு அலங்காரத்தில் கால-பைரவர் அருள்பாலித்தார். வீரகனுார் கங்கா சவுந்தரேஸ்வரர், ஆத்துார், கோட்டை காயநிர்ம-லேஸ்வரர், தம்மம்பட்டி காசிவிஸ்வநாதர் உள்-ளிட்ட கோவில்களில் தேய்பிறை அஷ்டமியை ஒட்டி பூஜை நடந்தது. ஏராளமான பக்தர்கள் வழி-பட்டனர்.
தாரமங்கலம் கைலாசநாதர் கோவிலில் கால-பைரவருக்கு சிறப்பு பூஜை நடந்தது. பால், தயிர், சந்தனம் உள்பட, 16 வகை வாசனை திரவியங்-களால் அபிஷேகம் செய்தனர். தொடர்ந்து சுவா-மிக்கு சந்தனம், பூக்கள் மற்றும் எலுமிச்சை மாலை அணிவித்து அலங்காரம் செய்து தீபாரா-தனை காட்டப்பட்டது.
சந்தன காப்பு அலங்காரத்தில் பைரவரை பக்-தர்கள் தரிசித்தனர். அதேபோல் கோவில் பள்ளி-யறை பூஜை முதலாமாண்டு நிறைவையொட்டி, பூக்களால் தோரணம் கட்டி அலங்காரம் செய்-தனர். தொடர்ந்து பள்ளியறை நாயனார், நாய-கியை, பூக்களால் அலங்கரித்த பல்லக்கில் வைத்து பூஜை நடந்தது.