காலபைரவர் கோவிலில் தேய்பிறை அஷ்டமி விழா

தர்மபுரி; அதியமான்கோட்டையில் உள்ள காலபைரவர் கோவிலில், தேய்பிறை அஷ்டமியையொட்டி, நேற்று நடந்த சிறப்பு வழிபாட்டில், திரளான பக்-தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
தர்மபுரி மாவட்டம், அதியமான்கோட்டையில் உள்ள காலபைரவர் கோவிலில், தேய்பிறை அஷ்டமி விழா நடந்தது. இதில் நேற்று அதி-காலை, 5:30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 6:00 மணிக்கு கணபதி ஹோமம், 64 பைரவர் ஹோமம், ஏகாந்த ருத்ர ஹோமம், 8:00 மணிக்கு கோ பூஜை, அஸ்தவ பூஜை, பைரவர் உற்சவ-மூர்த்தி கோவிலை வலம் வருதல், அதனை தொடர்ந்து, காலபைரவருக்கு, 18 வகையான அபிஷேகம் நடந்தன.தொடர்ந்து, சிறப்பு அலங்காரத்தில் காலபைரவர் அருள்பாலித்தார். இரவு, 10:30 மணிக்கு, 1,008 கிலோ மிளகாய், 108 கிலோ மிளகு மூலம், சத்ரு சம்ஹார யாகம், 64 பைரவர் யாகம், மகா குருதி பூஜை, நள்ளிரவு, 2:30 மணிக்கு பைரவர் சுவாமி பல்லாக்கில் கோவிலை சுற்றி வருதல், அதி-காலை, 3:00 மணிக்கு, 108 லிட்டர் பால் அபி-ஷேகம் உள்ளிட்டவை நடந்தது. திரளான பக்-தர்கள் சுவாமி தரிசனம் செய்ததுடன், வெண்பூச-ணியில் தீபம் ஏற்றி வழிபட்டனர்.