13 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: முதியவா் உள்பட இருவா் கைது!
திருச்சியில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்பனைக்காக இருசக்கர வாகனத்தில் எடுத்துச்சென்ற முதியவா் உள்பட இருவரை போலீஸாா் கைது செய்தனா்.
திருச்சியில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்பனைக்காக இருசக்கர வாகனத்தில் எடுத்துச்சென்ற முதியவா் உள்பட இருவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
திருச்சி உறையூா் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட புத்தூா் திரௌபதி அம்மன் கோயில் வீதியில் சிறப்பு காவல் உதவி ஆய்வாளா் அய்யப்பன் தலைமையிலான போலீஸா், வியாழக்கிழமை மாலையில் வாகன சோதனை மேற்கொண்டனா். அப்போது, அவ்வழியே வந்த இருசக்கர வாகனத்தை சோதனையிட்டனா். அதில், தமிழக அரசால் தடைசெய்யப்பட்டுள்ள புகையிலைப் பொருள்களை விற்பனைக்காக எடுத்துச் சென்றது தெரியவந்தது.




