Politics
புகையிலை பொருட்கள் விற்றவருக்கு காப்பு
அரவக்குறிச்சி:அரவக்குறிச்சி அருகே சட்ட விரோதமாக புகையிலை பொருட்கள் விற்றவர் கைது செய்யப்பட்டார்.
அரவக்குறிச்சி போலீசார் ஈசநத்தம் அடுத்த சுக்காம்பட்டி பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது, ஈ.வி.புதுார் பகுதியை சேர்ந்த கணேசன் என்பவது பெட்டிக்கடையில், சோதனை நடத்தினர். அதில் 4,000 ரூபாய் மதிப்புள்ள புகையிலை பொருட்கள் விற்பனைக்காக வைத்திருந்தது தெரியவந்தது. உடனடியாக அவற்றை பறிமுதல் செய்த போலீசார், கணேசனை கைது செய்தனர்.