Politics
புகையிலை விற்ற வாலிபர் கைது
திருப்போரூர், செப். 7--– கேளம்பாக்கத்தில் புகையிலை பொருட்களை விற்ற, ரபி, 36, கைது செய்யப்பட்டார்.
கேளம்பாக்கத்தில் புகையிலை பொருட்களை விற்ற, ரபி, 36, கைது செய்யப்பட்டார்.
திருப்போரூர் அருகே கேளம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில், தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்வதாக கேளம்பாக்கம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
கேளம்பாக்கம் போலீசார் நேற்று காலை மேற்கண்ட பகுதிகளில் உள்ள கடைகளில் சோதனை செய்தனர்.
இதில், கேளம்பாக்கம் வீராணம் சாலையில் உள்ள டீ கடை ஒன்றில், இருந்த புகையிலை பொருட்கள் இருப்பது தெரிந்தது. கடையின் உரிமையாளர் முகமது ரபி, என்பவரை கைது செய்து, 23 கிலோ புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.