Politics
292 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்

தர்மபுரி: தர்மபுரி டவுன் போலீஸ் ஸ்டேசன் எஸ்.ஐ., சுந்தரமூர்த்தி தலை-மையிலான போலீசார் நேற்று முன்தினம் அதிகாலை, 4:00 மணிக்கு தர்மபுரி அருகே, பெங்களுரு - சேலம் தேசிய நெடுஞ்-சாலையில் பட்டர்பிளை மேம்பாலம் அருகே, வாகன சோத-னையில் ஈடுபட்டனர்.
அவ்வழியாக வந்த மஹிந்திரா எக்ஸ்.யூ.வி., காரை நிறுத்தியபோது, டிரைவர் காரை நிறுத்தி விட்டு தப்பியோடினார். காரில் சோதனை செய்த போது, 292 கிலோ எடை கொண்ட, 4.55 லட்சம் ரூபாய் மதிப்பிலான புகை-யிலை பொருட்கள் இருந்தது தெரிந்தது. இதையடுத்து, புகை-யிலை பொருட்கள் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய காரை போலீசார் பறிமுதல் செய்து, விசாரித்து வருகின்றனர்.