விநாயகர் சிலையை கரைக்க சென்ற வாலிபர் கடலில் மூழ்கி உயிரிழப்பு
திருவொற்றியூர், திருவொற்றியூரில் விநாயகர் சிலையை கடலில் கரைக்கச் சென்ற வாலிபர் கடலில் மூழ்கி பலியானார். விநாயகர் சிலைதிருவொற்றியூர் சண்முகபுரம் பகுதியை சேர்ந்தவ
திருவொற்றியூரில் விநாயகர் சிலையை கடலில் கரைக்கச் சென்ற வாலிபர் கடலில் மூழ்கி பலியானார்.
திருவொற்றியூர் சண்முகபுரம் பகுதியை சேர்ந்தவர் கமலக்கண்ணன் (வயது 35). இவர், திருவொற்றியூரில் உள்ள ஒரு தனியார் டயர் தொழிற்சாலையில் ஒப்பந்த அடிப்படையில் வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி காமாட்சி. நேற்று முன்தினம் விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி, கமலக்கண்ணன் தனது வீட்டில் சிறிய விநாயகர் சிலை வைத்து வழிபாடு செய்தார்.
பின்னர் மாலையில் தனது மோட்டார் சைக்கிளில் அந்த விநாயகர் சிலையை கொண்டு சென்று எண்ணூர் பாரதியார் நகர் அருகே கடலில் கரைத்துவிட்டு வருவதாக கூறி சென்றுள்ளார். ஆனால், வெகு நேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அவரது மனைவி காமாட்சி, கமலக்கண்ணனின் செல்போனுக்கு தொடர்பு கொண்டார். ஆனால் அவர் எடுக்கவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த காமாட்சி, பாரதியார் நகர் கடற்கரைக்குச் சென்று பார்த்த போது. அங்கு கமலக்கண்ணன் ஓட்டிச்சென்ற மோட்டார் சைக்கிள் நின்று கொண்டிருந்தது. இதில் அவரது செல்போன் இருந்தது.


/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062524269z-nkn-png-logo-100x100-nakkheeran-adops.png)


