விநாயகர் சிலையை கரைக்க வந்தவர் ஆற்றில் மூழ்கி பலி
பவானி:சேலம் மாவட்டம், நெய்காரப்பட்டியை சேர்ந்தவர் விக்னேஷ், 26. இவர் தனது நண்பர்களுடன் சேர்ந்து, விநாயகர்
மாவட்டம், நெய்காரப்பட்டியை சேர்ந்தவர் விக்னேஷ், 26. இவர் தனது
நண்பர்களுடன் சேர்ந்து, விநாயகர் சிலையை கரைப்பதற்காக, நேற்று மாலை
பவானி அருகே லட்சுமி நகர், காவிரி ஆற்றுபாலத்தின் கீழ் வந்துள்ளனர்.
அப்போது, விக்னேஷ் ஆற்றின் ஆழமான பகுதிக்கு சென்று நீச்சல் தெரியாமல்,
தண்ணீரில் மூழ்கி இறந்தார். பின்னர் அவரது நண்பர்கள், சித்தோடு
போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு சென்ற
போலீசார், மீன் பிடிப்பவர்கள் உதவியுடன், அவரது உடலை மீட்டு
உடற்கூறு ஆய்விற்காக, பெருந்துறை அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.