சிலை கரைக்க வந்தவர் ஆற்றில் மூழ்கி பலி
பவானி; சேலம் மாவட்டம் நெய்காரப்பட்டியை சேர்ந்தவர் விக்னேஷ், 26. இவர் நண்பர்களுடன் சேர்ந்து, விநாயகர் சிலையை கரைக்க, நேற்று மாலை பவானி அருகே லட்சுமி நகர், காவிரி ஆற்றுபா-லத்துக்கு வந்தார்.
நீச்சல் தெரியாத விக்னேஷ், ஆற்றின் ஆழமான பகுதிக்கு சென்றபோது மூழ்கி இறந்தார். பின்னர் அவரது நண்பர்கள், சித்தோடு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், மீன் பிடிப்பவர்கள் உதவியுடன், அவரது உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக, பெருந்துறை அரசு மருத்துவக் கல்-லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062524269z-nkn-png-logo-100x100-nakkheeran-adops.png)