நில ஆக்கிரமிப்பு விவகாரத்தில் பிரதமர் மோடியிடம் நேரில் உதவி கேட்ட பள்ளி தோழர்
புதுடெல்லி,தனக்கு சொந்தமான கோடி மதிப்புள்ள நிலம் ஆக்கிரமிக்கப்பட்ட விவகாரத்தில் நீதி கேட்டு, பிரதமர் மோடியை அவரது பள்ளி தோழரான 81 வயது முதியவர் நேரில் சந்தித்து
தனக்கு சொந்தமான கோடி மதிப்புள்ள நிலம் ஆக்கிரமிக்கப்பட்ட விவகாரத்தில் நீதி கேட்டு, பிரதமர் மோடியை அவரது பள்ளி தோழரான 81 வயது முதியவர் நேரில் சந்தித்து கண்ணீருடன் புகார் மனு அளித்துள்ளார்.
அஸ்கரலி வோஹ்ரா, பிரதமர் மோடியும் குஜராத் மாநிலம் வாட்நகரில் உள்ள பி.என். மேல்நிலை பள்ளியில் ஒன்றாக படித்ததாக கூறப்படுகிறது. கடந்த 1989-ஆம் ஆண்டு மராட்டியத்தின் பயந்தர் கிழக்கு பகுதியில் சுமார் 2,810 சதுர மீட்டர் நிலத்தை சட்டப்பூர்வமாக விலை கொடுத்து வாங்கியுள்ளார்.
கடந்த 2011-ஆம் ஆண்டில் போலி ஆவணங்களை தயாரித்து, பா.ஜ.க முன்னாள் எம்.எல்.ஏ-வுக்கு தொடர்புடைய கட்டுமான நிறுவனங்கள் எனது நிலத்தை அராஜகமாக ஆக்கிரமித்து கொண்டன. இதுகுறித்து கடந்த 2015-ல் போலீசில் புகார் அளித்தும், பல ஆண்டுகளாக வருவாய்த்துறை மற்றும் காவல் நிலையங்களில் அலைந்து திரிந்தும் எந்த பலனும் கிடைக்கவில்லை.



/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062524269z-nkn-png-logo-100x100-nakkheeran-adops.png)










